சென்னை டிச, 17
தமிழகம் முழுவதும் உள்ள திருக்கோவில்களில் சிறப்பு தரிசனம் கட்டணம் படிப்படியாக ரத்து செய்யப்படும் என்று அமைச்சர் சேகர் பாபு உறுதி அளித்துள்ளார். கோவில்களில் சிறப்பு தரிசன கட்டணத்தை முழுவதுமாக ரத்து செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி எந்தெந்த கோவில்களில் கட்டணத்தை ரத்து செய்யலாம் என்று கருத்து கேட்கப்பட்டுள்ளது. அதன் பின் இது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும்.