கோயம்புத்தூர் டிச, 16
வால்பாறை நகராட்சியில் பதிவு செய்து வேலை செய்யும் ஒப்பந்ததாரர்களுக்கு, கடந்த, 2020-ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட பல்வேறு வளர்ச்சி பணிகளுக்கான பில் தொகை இதுவரை வழங்கப்படவில்லை. 2 ஆண்டுகளுக்கு மேலாகியும் தொகை வழங்கப்படா ததால் , அதிருப்தி அடைந்த ஒப்பந்ததாரர்கள் நேற்று நகராட்சி அலுவலக வளாகத்தில் திடீர் என்று உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் தகவல் அறிந்ததும் நகராட்சி தலைவர் அழகு சுந்தரவள்ளி, ஆணையர் பாலு, பொறியாளர் வெங்கடாசலம் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டவரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். வரும் 23 ம்தேதிக்குள் நிலுவை தொகை படிப்படியாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்ததின் பேரில் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.