சென்னை டிச, 16
‘ஒரே நாடு ஒரே ரேஷன்’ திட்டத்தில் ஆதார் மூலம் ரேஷன் பொருட்களை வாங்க முடியும் என்று மக்களவையில் மத்திய அமைச்சர் சாத்வி நிரஞ்சன் ஜோதி பதில் அளித்துள்ளார்.’ ஒரே நாடு ஒரே ரேஷன்’ அட்டையை பயன்படுத்தி நாட்டில் எந்த ரேஷனிலும் பொருட்கள் வாங்க முடியும். மேலும் இத்திட்டத்தால் பயோமெட்ரிக் அங்கீகாரம் கொண்ட ஆதார் கொண்டும் பொருட்களை பெற முடியும். இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருவதாக தகவல் தெரிவித்துள்ளார்.
