சேலம் டிச, 15
தி.மு.க. அரசை கண்டித்து தாரமங்கலம் நகர அ.தி.மு.க. சார்பில் நகராட்சி அலுவலகம் எதிரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்தஆர்ப்பாட்டத்திற்கு நகர செயலாளர் பாலசுப்ரமணியம் தலைமை தாங்கினார். அவைத்தலைவர் கோவிந்தராஜ் வரவேற்புரை ஆற்றினார். தாரமங்கலம் தெற்கு ஒன்றிய செயலாளர் சின்னுசாமி, வடக்கு ஒன்றிய செயலாளர் மணிமுத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சரும், அமைப்பு செயலாளருமான செம்மலை கலந்து கொண்டு தி.மு.க. அரசின் சொத்து வரி, மின்கட்டணம், பால் விலை உயர்வு உள்ளிட்ட வற்றை திரும்ப பெற வலியுறுத்தி கண்டன உரையாற்றினார்.
இதில் நகராட்சி கவுன்சிலர்கள் தமிழ்செல்வி, ருக்மணி, சின்னுசாமி, முன்னாள் ஒன்றியகுழு தலைவர் ஏழுமலை,மகளிர் அணி நிர்வாகிகள் தாமரைசெல்வி, கவிதா உட்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர், முடிவில் எம்.ஜி.ஆர் மன்ற மாவட்ட துணைசெயலாளர் துரைராஜ் நன்றி கூறினார்.