சென்னை டிச, 15
அப்துல் கலாம் வழியில் இளைஞர்கள் நாட்டு வளர்ச்சிக்கு பாடுபட வேண்டும் என ஆளுநர் ஆர்.என். ரவி தெரிவித்துள்ளார் சென்னை எம்.ஐ.டியில் நிறுவப்பட்ட அப்துல் கலாம் சிலையை திறந்து வைத்து பேசிய அவர், 2047 ல் உலகிற்கு தலைமை ஏற்கும் இடத்திற்கு இந்தியா முன்னேற இருக்கிறது. பாதுகாப்பு, அறிவியல், தொழில்நுட்ப துறைகளில் கலாமின் பங்கு போற்றத்தக்கது. அதனால் இளைஞர்கள் அவர் வழியில் செயல்களை முன்னெடுக்க வேண்டும் என்றார்.
