Spread the love

திருப்பூர் டிச, 14

பல்லடம் அருகே சித்தம்பலம் ஊராட்சியில் பிளாஸ்டிக் இல்லா ஊராட்சியாக மாற்றும் முயற்சியாக சித்தம்பலம் ஊராட்சி நிர்வாகம் ரெயின்போ ரோட்டரி சங்கம் ஆகியவை சார்பில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு விழா நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் திருப்பூர் தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், திருப்பூர் வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளருமான செல்வராஜ் கலந்துகொண்டு பிளாஸ்டிக் பொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்து விளக்கி பேசினார். பின்னர் ஒலிபெருக்கி மூலம் பிளாஸ்டிக் விழிப்புணர்வு விளம்பரத்தை துவக்கி வைத்தார். இதே போல மோட்டார் சைக்கிளில் சென்று பிளாஸ்டிக் விழிப்புணர்வு ஏற்படுத்தி இலவசமாக துணிப்பை வழங்கும் ரோட்டரி சங்க உறுப்பினர் ஆறுமுகத்தின் பிளாஸ்டிக் விழிப்புணர்வு பயணத்தை துவக்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் பொங்கலூர் ஒன்றிய குழு தலைவர் குமார், பல்லடம் ஊராட்சி ஒன்றிய குழு துணை தலைவர் பாலசுப்ரமணியம், பொங்கலூர் தி.மு.க. ஒன்றிய செயலாளர் அசோகன், முன்னாள் பல்லடம் நகராட்சி தலைவர் பி.ஏ.சேகர்,ரோட்டரி சங்க முன்னாள் தலைவர் கவிதா,இளைஞர் அணி ராஜேஸ்வரன், தொண்டரணி பானுமதி மற்றும் நிர்வாகிகள், பொதுமக்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *