சென்னை டிச, 13
சென்னையில் 46வது புத்தகக் கண்காட்சி ஜனவரி 6 முதல் 22 வரை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் தெரிவித்துள்ளது. இது குறித்து பேசிய செயலர் முருகன் நந்தனத்தில் உள்ள ஒய்எம்சிஏ மைதானத்தில் புத்தகக் கண்காட்சி நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. முதலமைச்சர் ஸ்டாலின் தேதியை உறுதி செய்த பிறகு திறப்பு விழா தேதி அதற்கேற்றார் போல் மாற்றி அமைக்கப்படும் எனக் கூறியுள்ளார்.
