சென்னை டிச, 13
அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கின் விசாரணையை உச்சநீதிமன்றம் டிசம்பர் மாதம் 15 ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கடந்த ஜூலை 11 இல் அதிமுக பொது குழு நடத்தப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்த வழக்கின் விசாரணை நேற்று நடைபெற்றது. அதில் இந்த வழக்கின் விசாரணையை விரைந்து முடிக்கும் படி எடப்பாடி பழனிச்சாமியின் வழக்கறிஞர் வாதிட்டார். ஆனால் ஓ.பன்னீர்செல்வம் சார்பில் மூத்த வழக்கறிஞர் ஆஜராகாததால் வழக்கை ஒத்திவைத்து நீதிமன்றம் உத்தரவிட்டது.