கோயம்புத்தூர் டிச, 12
சூலூர் அருகே கிட்டாம்பாளையம் ஊராட்சி உள்ளது. இங்கு நீண்ட நாட்களாக பொதுமக்கள் மற்றும் மாணவர்களின் நலனுக்காக நூலகம் வேண்டி பல முறை கோரிக்கை வைக்கப்பட்டது. ஊராட்சி தலைவர் சந்திரசேகர் இது பற்றி மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் உள்ளிட்டோரிடம் கோரிக்கைகளை வலியுறுத்தினார்.
இதனையடுத்து கோவை மாவட்ட நூலகத்தின் சார்பில் கிட்டாம்பாளையத்தில் பகுதி நேர நூலகம் திறக்க அரசு ஆணை வெளியிடப்பட்டது. இதன் பேரில் கிட்டாம்பாளையம் ஊராட்சி தலைவர் தலைமையில் நூலக திறப்பு விழா நடைபெற்றது.
இவ்விழாவில் சூலூர் வடக்கு ஒன்றிய திமுக.செயலாளர் அன்பரசு, கோவை வடக்கு மாவட்ட பாஜக. பொதுச் செயலாளர் சத்திய மூர்த்தி சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். பள்ளி மாணவர்கள் திரளாக திருவிழாவில் கலந்து கொண்டனர்.