கேரளா டிச, 11
கேரளா மாநிலம் சாலக்குடி அருகே ரயில்வே பராமரிப்பு பணி நடைபெற்று வருகிறது. இதனால் நெல்லையில் இருந்து நேற்று இரவு புறப்பட வேண்டிய பாலக்காடு பாலருவி எக்ஸ்பிரஸ் ரயில் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் பாலக்காட்டில் இருந்து இன்று புறப்பட வேண்டிய பாலருவி எக்ஸ்பிரஸ் ரயிலும் ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை மதுரை ரயில்வே கோட்ட அலுவலகம் வெளியிட்டுள்ளது.