சென்னை டிச, 11
தமிழகத்தில் மொத்தமாக 37,481 அரசு பள்ளிகளில் 52.7 லட்சம் மாணவர்கள் பயின்று வருகின்றனர். அவர்களின் விளையாட்டுத் திறனை ஊக்குவிக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் மாணவர்களுக்கு தேவையான விளையாட்டு உபகரணங்கள் மாவட்ட கல்வி அலுவலகங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. அதனை பள்ளிகளுக்கு விநியோகம் செய்யும் பணியை முடுக்கிவிடப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை ஆணையரகம் தெரிவித்துள்ளது.