சென்னை டிச, 11
ரேஷன் கடைக்கு வருபவர்களிடம் மளிகை பொருட்களை வாங்கும்படி கட்டாயப்படுத்தினால் ஊழியர்கள்மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கூட்டுறவுத்துறை தெரிவித்துள்ளது. தொடர்ந்து இது தொடர்பான புகார்கள் வருவதால், இதற்கு முற்றுப்புள்ளி வைக்க அனைத்து ரேஷன் கடைகளிலும் புகார் அளிப்பது தொடர்பான விபரங்களை அப்பகுதிகளில் உள்ள கடைகளில் விளம்பரம் செய்யும்படி மண்டல இணை பதிவாளர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது