கிருஷ்ணகிரி டிச, 10
ஓசூர் மாநகராட்சி அலுவலகத்தில், மாவட்ட ஆட்சியர் ஜெயச்சந்திர பானு ரெட்டி, நேற்று ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது, மாநகராட்சியில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகள், வரி வசூல் மற்றும் சுகாதார, தூய்மைப் பணிகள், திடக்கழிவு மேலாண்மைப் பணிகள் உள்ளிட்ட பல்வேறு பணிகளின் பதிவேடுகளையும் அடிப்படை கட்டமைப்பு வசதிகள் நடைபெற்று வரும் பணிகள் குறித்தும். அவர், அலுவலர்களிடம் கேட்டறிந்தார். இந்த ஆய்வின்போது, ஓசூர் மாநகராட்சி ஆணையர் பாலசுப்பிரமணியன் மற்றும் மாநகராட்சி பொறியாளர்கள், அலுவலர்கள் உடன் இருந்தனர்.