சென்னை ஆகஸ்ட், 9
சென்னை அடுத்த வண்டலூர் உயிரியல் பூங்கா வழக்கமாக செவ்வாய்க்கிழமை விடுமுறை நாளாகும். ஆனால் இன்று மொகரம் பண்டிகையையொட்டி வண்டலூர் உயிரியல் பூங்கா திறந்திருக்கும்.
அதற்கு பதிலாக வருகிற 12-ம்தேதி அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா மூடப்படும். இந்த தகவல் வண்டலூர் பூங்கா நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.