மதுரை டிச, 9
மதுரை பெருங்குடி விமான நிலையம் அருகே அமைக்கப்பட்டுள்ள அம்பேத்கரின் முழு உருவ வெண்கல சிலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். முன்னதாக தென்காசிக்கு ரயில் மூலம் சென்ற அவர் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். இன்று காலை மதுரை சென்றவர் தூய்மை பணியாளர்களுக்கான மேம்பாட்டு திட்டத்தை தொடங்கி வைத்தார். சிலை திறப்பின் போது திருமாவளவன் மற்றும் மூத்த தலைவர்கள் உடன் இருந்தனர்.