திருப்பூர் டிச, 9
திருப்பூர் ஊத்துக்குளி ரோட்டில் உள்ள மூலிகுளத்தை புனரமைத்து தடுப்பு சுவர் கட்ட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். அதனை ஏற்று மூலி குளத்தை புனரமைப்பு செய்ய முடிவு செய்யப்பட்டு ரூ. 59. 50 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதன்படி புனரமைப்பு பணிக்கான பூமி பூஜை நேற்று காலை நடைபெற்றது.
இந்நிகழ்வில் திருப்பூர் தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் செல்வராஜ், மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் ஆகியோர் புனரமைப்பு பணியை பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தனர்.மூலிகுளத்தை சுற்றிலும் சுற்றுச்சுவர் அமைத்தல், உட்புற கற்கள் பதித்தல் போன்ற பணிகள் நடைபெற உள்ளது.
இந்நிகழ்ச்சியில் துணை மேயர் பாலசுப்ரமணியம், கவுன்சிலர்கள் ராதாகிருஷ்ணன், செந்தில்குமார், பஞ்சாயத்து தலைவர் ரங்கசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.