கிருஷ்ணகிரி டிச, 8
கிருஷ்ணகிரி புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள அண்ணா சிலை எதிரில், பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
இதில் தொகுதி தலைவர் சதாம் உசேன் தலைமை தாங்கினார். மாவட்ட பொதுச்செயலாளர் கலில் வரவேற்றார். எஸ்.டி.டி.யூ. மாநில தலைவர் முஹம்மத் ஆசாத், கிழக்கு மாவட்ட தலைவர் அஸ்கர் அலி, அஹலே சுன்னத்வல் ஜமாத் சொசைட்டி தலைவர் சையத் இர்பானுல்லா உசேனி, ஷாஜி மஸ்ஜித் தலைவர் முஷ்தாக் அஹமத், பூரா மஸ்ஜித் தலைவர் ஜாவித் பாஷா, பூரா மஸ்ஜித் துணைத் தலைவர் ஹபீப் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.