சென்னை டிச, 8
சென்னை உட்பட 12 நகரங்களில் ஏர்டெல் 5ஜி சேவையானது இயங்கி வருகிறது. சென்னையில் அனைத்து கிளைகளிலும் 5ஜி சேவையின் தகவல்களை தெரிந்து கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் 5ஜி நெட்வொர்க்கில் 4ஜியை விட 20 முதல் 30 மடங்கு வேகம் அதிக அளவில் இருக்கும் என டெமோ வீடியோ காட்சியை ஏர்டெல் வெளியிட்டது. இதனால் மிகப்பெரிய வீடியோவை சில நிமிடங்களில் பதிவிறக்கம் செய்யலாம் என தெரிவித்துள்ளது.