புது டெல்லி டிச, 7
டெல்லி மாநகராட்சி தேர்தலில் இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன. கடந்த நான்காம் தேதி நடைபெற்ற வாக்குப்பதிவில் மொத்தமுள்ள 250 வார்டுகளுக்கும் சேர்த்து 50% வாக்குகள் பதிவாகி இருந்தன. இங்கு ஆளும் ஆம் ஆத்மி, பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் தங்களது வேட்பாளர்களை களத்தில் இறக்கியது. இன்று முடிவுகள் எண்ணப்பட்டு வெற்றியாளர் அறிவிக்கப்பட உள்ளது.