நாமக்கல் டிச, 7
பரமத்தி வேலூர், கந்தம்பாளையம், ஜேடர்பாளையம், சோழசிராமணி ஆகிய பகுதிகளில் வெண்டைக்காய் சாகுபடி செய்து வருகின்றனர். தற்போது பருவநிலை மாற்றம் வெண்டைக்காய் விளைச்சலுக்கு சாதகமாக இருப்பதால் வெண்டைக்காய் விளைச்சல் 2 மடங்காக அதிகரித்து உள்ளது. ஆனால் அதே நேரத்தில் வெண்டைக்காய் விலை பாதியாக குறைந்து உள்ளது.
கடந்த ஆகஸ்ட் மாதங்களில் வியாபாரிகளுக்கு மொத்த விலையில் கிலோ ரூ.20-க்கு விற்ற வெண்டைக்காய், தற்போது கிலோ ரூ.7 ஆக குறைந்து உள்ளது. விலை சரிவால் வெண்டைக்காய் பயிரிட்ட விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர்.