சென்னை டிச, 6
தேசிய கல்விக் கொள்கை நிச்சயம் புதிய மாற்றத்தை கொண்டு வரும் என ஆளுநர் ஆர்.என்.ரவி நம்பிக்கை தெரிவித்துள்ளார். சென்னையில் ராதா சுவாமி சிறப்பு மையத்தை திறந்து வைத்து பேசிய அவர், திறமையான ஆசிரியர்கள் இல்லாததே அறிவியல் படிப்புகளை மாணவர்கள் அதிகம் தேர்வு செய்யாததற்கு காரணம் என குற்றம் சாட்டினார். இந்தியாவில் கலை படிப்புகளில் தான் 70% பேர் முதுகலை படிப்பை முடித்ததாகவும் அவர் சுட்டிக் காட்டினார்.