செங்கல்பட்டு டிச, 2
பாட்டாளி மக்கள் கட்சி செங்கை மத்திய-தெற்கு மாவட்ட நிர்வாகிகள் மற்றும் முன்னோடிகள் சந்திப்பு கூட்டம் செங்கல்பட்டில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நேற்று நடைபெற்றது.
இதில் பா.ம.க.தலைவர் அன்புமணி ராமதாஸ் தொண்டர்கள் மத்தியில் கலந்துரையாடினார். இந்த நிகழ்ச்சியில் மாநில வன்னியர் சங்க செயலாளரும், முன்னாள் சட்ட மன்ற உறுப்பினருமான திருக்கச்சூர், ஆறுமுகம் தலைமை தாங்கினார். தலைவர் மணி, முன்னாள் மத்திய அமைச்சர் மூர்த்தி, உள்ளிட்ட ஏராளமான கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
பின்னர் தனியார் மண்டபத்தில், பாட்டாளி மக்கள் சார்பில் நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் நடைபெற்றது. இந்த நிர்வாகிகள் கூட்டத்தில் பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டு நிர்வாகிகள் மத்தியில், கட்சி வளர்ச்சி குறித்து பேசினார். பின்னர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில்,
செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அருகே உப்பளம் பகுதியில் தமிழக அரசுக்கு சொந்தமான, 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கர் நிலங்கள் பயன்படுத்தாமல் இருக்கிறது. அந்த இடத்தில் விவசாயம் பண்ண முடியாது என்பதால், காஞ்சீபுரம் மாவட்டம் பரந்தூரில் அமைப்பதற்கு பதிலாக மாற்று இடமாக செங்கல்பட்டு மாவட்டத்தில் புதிய விமான நிலையம் அமைக்க தமிழக அரசு ஆய்வு செய்து, மத்திய அரசின் அனுமதியை பெற வேண்டும் என அவர் தெரிவித்தார்.