திருப்பூர் நவ, 30
திருப்பூர் மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் மண்டலம் 4 வார்டு 55 பொரிச்சி பாளையத்தில் தண்ணீர் தொட்டியில் இன்று மேல்நிலை நீர் தேக்க தொட்டியில் ஆய்வு மேற்கொண்டு பொது மக்களிடம் குடிநீர் வினியோகம் குறித்து கேட்டு அறிந்தார். மேலும் தண்ணீர் வினியோகம் மற்றும் தூய்மை பணியாளர்களின் வருகை பதிவேடு ஆகியவற்றை பார்வையிட்டார். உடன் நான்காவது மண்டல தலைவர் பத்மநாபன் மாமன்ற உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.