திண்டுக்கல் ஆகஸ்ட், 8
டோக்கியோவில் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் கடந்த 7-ம்தேதி நடந்த ஒலிம்பிக் ஈட்டி எறிதல் போட்டியில் இந்தியாவை சேர்ந்த நீரச் சோப்ரா தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்தார். அவரை கவுரவிக்கும் வகையில் இந்திய தடகள சம்மேளனம் சார்பில் நாடு முழுவதும் நீரச் சோப்ரா தங்கம் வென்ற அதே நாளில் ஈட்டி எறிதல் போட்டி இன்று நடைபெற்றது.
அதன்படி, தமிழக தடகள சங்கத்தின் தலைவர் தேவாரம், செயலாளர் லதா ஆகியோரின் அறிவுறுத்தலின்பேரில் திண்டுக்கல் மாவட்ட தடகள சங்கத்தின் சார்பில் நத்தம் என்.பி.ஆர். கல்லூரி விளையாட்டு மைதானத்தில் ஆண்கள், பெண்கள் பிரிவில் 16, 18, 20 வயதுக்குட்பட்டோருக்கான ஈட்டி எறிதல் போட்டி நேற்று நடைபெற்றது.
இதில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 150-க் கும் மேற்பட்ட வீரர்-வீராங்கனைகள் கலந்துகொண்டனர். முன்னதாக போட்டியை திண்டுக்கல் மாவட்ட தடகள சங்க தலைவர் துரை, மாநில தடகள சங்க இணைச்செயலாளர் சிவக்குமார் ஆகியோர் தலைமை தாங்கி தொடங்கி வைத்தனர்.
இந்த போட்டியில் தஞ்சாவூரை சேர்ந்த வீரர்-வீராங்கனைகள் பல்வேறு பிரிவுகளில் முதல் 3 இடங்களை பிடித்து, ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றனர். மேலும் திண்டுக்கல், சென்னை, கோவையை சேர்ந்த வீரர்-வீராங்கனைகளும் சில பிரிவுகளில் வெற்றி பெற்றனர். பின்னர் வெற்றிபெற்ற வீரர்-வீராங்கனைகளுக்கு, திண்டுக்கல் மாவட்ட தடகள சங்க பொருளாளர் துரைராஜ், பயிற்சியாளர் ரேகா, உடற்கல்வி இயக்குனர்கள் சத்தியமூர்த்தி, சுந்தரவேல் ஆகியோர் பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கி பாராட்டினர்.
மேலும் செய்திகளை உடனே படிக்க.
http://www.vanakambharatham24x7news.in