விழுப்புரம் நவ, 29
விழுப்புரத்தில் பொதுசுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறையின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, சுகாதாரத்துறை பணியாளர்கள் பங்கேற்ற மினி மாரத்தான் போட்டி நடைபெற்றது.
இதை மாவட்ட ஆட்சியர் மோகன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் பரமேஸ்வரி, துணை இயக்குனர் பொற்கொடி, விழுப்புரம் தாசில்தார் ஆனந்தகுமார் உள்பட பலர் கலந்துகொண்டனர்.