ராணிப்பேட்டை நவ, 28
அரக்கோணம் அரசு பொது மருத்துவமனையில் நாம் தமிழர் கட்சியின் அரக்கோணம் சட்டமன்றத் தொகுதி செயலாளர் அம்ஜத் பாஷா தலைமையில் மாவட்ட இளைஞர் பாசறை செயலாளர் அசேன் முன்னிலையில் ரத்ததான முகாம் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் அரக்கோணம் பாராளுமன்ற தொகுதி பொறுப்பாளர் தௌபிக் பிர்கத் மாவட்ட செயலாளர் பாவேந்தன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
அரக்கோணம் தொகுதி செயலாளர் தென்னரசு, தொகுதி பொறுப்பாளர்கள் பாஸ்கரன், கார்த்திகேயன், நரேந்திரன், முகம்மது காசிம், கண்மணி, ராஜா, லட்சுமிபதி, அய்யப்பன் மற்றும் நகர ஒன்றிய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். குருதி நன்கொடை கொடுத்த தோழர்களுக்கு அரசு டாக்டர் ஷோபனா சான்றிதழ் மற்றும் மரக்கன்று வழங்கினார். இதில் 100-க்கும் மேற்பட்டோர் ரத்த தானம் வழங்கினர்.