திருப்பூர் நவ, 28
திருப்பூரில் மக்கள் ஜனநாயக முன்னேற்றக் கழகத்தின் கூட்டத்தில் புதிய பொறுப்பாளர்கள் பங்கேற்றனர்.
இந்நிகழ்ச்சியில் கந்து வட்டிக்கு நிகராக புதுப்பிக்கப்பட்டுள்ள சட்டவிரோத மகளிர் சுய உதவி குழுவை தடை செய்ய வலியுறுத்தியும், மக்களை ஆபாசமாக மிரட்டி கலெக்சன் டீம் என்ற போர்வையில் சட்டவிரோதமாக வசூல் செய்வதை தமிழக அரசு தடை செய்ய வலியுறுத்தியும், தமிழக காவல்துறை தலைவர் இரும்பு கரம் கொண்டு அடக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.
இவ்விழாவில் மக்கள் ஜனநாயக முன்னேற்ற கழகத்தின் நிறுவனத் தலைவர் இப்ராஹிம் பாதுஷா, பொதுச் செயலாளர் வேல்முருகன், தலைமை ஒருங்கிணைப்பாளர் மணிகண்டன், அமைப்புச் செயலாளர் சீனிவாசன், தலைமை நிலைய செயலாளர் யுவராஜ், திருப்பூர் மாவட்ட தலைவர் மகேந்திரன், திருப்பூர் மாவட்ட செயலாளர் பிரகாஷ் மற்றும் மாநில மாவட்ட கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
A.மருதமுத்து.
செய்தியாளர்.
திருப்பூர் செய்திப் பிரிவு.