சென்னை நவ, 28
ராமநாதபுரம் தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் காலியாக உள்ள ஆண் பெண் மூன்றாம் பாலினத்திற்கான இரண்டாம் நிலை காவலர், சிறைக் காவலர், தீயணைப்பு மீட்பு பணிகளுக்கு எழுத்து தேர்வு நேற்று நடைபெற்றது. மாவட்டத்தில் 1,725 பெண்கள் உள்பட 9,990 பேர் விண்ணப்பித்தனர். தேர்வு மையங்களை காவல்துறை கண்காணிப்பாளர் மயில்வாகனன் காவல் ஆய்வாளர் தங்கதுரை ஆய்வு செய்தனர். தேர்வினை 8,354 பேர் மட்டுமே எழுதினர் 1,636 பேர் தேர்வு எழுதவில்லை.