சென்னை நவ, 27
நடிகரும், சேப்பாக் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் இன்று தனது 46 வது பிறந்த நாளை கொண்டாடுகிறார்.
இதனையொட்டி ஏராளமானோர் அதிகாலை முதலே அவருக்கு வாழ்த்துக்களை குவித்து வருகின்றனர். இந்நிலையில், உதயநிதி ஸ்டாலின் தனது பிறந்தநாளையடுத்து சென்னை மெரினாவில் உள்ள முன்னாள் முதலமைச்சர்கள் அண்ணா, கருணாநிதியின் நினைவிடங்களில் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.