நெல்லை ஆகஸ்ட், 7
நெல்லையில் நேற்று கொலை செய்யப்பட்ட பேச்சிராஜனின் உறவினர்கள் மதுரை பைபாஸ் சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சம்பவ இடத்திற்கு காவல்துறையினர் விரைந்து சென்று பேச்சுவார்த்தை நடத்தினர்.
பின்னர் பால்கட்டளை செல்லும் சாலையில் உறவினர்கள் போராட்டத்தை தொடர்ந்தனர். சம்பவ இடத்திற்கு மாநகர காவல் ஆணையர் அவினாஷ் குமார், மாவட்ட வருவாய் அலுவலர் சந்திரசேகர் ஆகியோர் சென்று பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது பேச்சிராஜனை கொலை செய்தவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும், இழப்பீடாக ரூ.50 லட்சம் வழங்க வேண்டும், பேச்சிராஜனின் மனைவி தங்கமாரிக்கு படிப்புக்கு தகுந்த அரசு வேலை வழங்க வேண்டும், எங்கள் குடும்பத்திற்கு தகுந்த பாதுகாப்பு வழங்க வேண்டும் என்பது உள்பட சில கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
அவற்றை மனுவாக எழுதி கொடுத்தால் அரசுக்கு அனுப்பி பரிந்துரை செய்யப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்தனர்.
இதைத்தொடர்ந்து பேச்சிராஜனின் தந்தை தங்கராஜ் கோரிக்கைகளை மனுவாக எழுதி ஆட்சியருக்கு கொடுத்தார். எனினும் கோரிக்கைகள் நிறைவேறும் வரை உடலை வாங்க மாட்டோம் என பேச்சிராஜனின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் செய்திகளை உடனே படிக்க.
http://www.vanakambharatham24x7news.in