அரியலூர் நவ, 22
அரியலூர் மாவட்டத்தில் 69-வது அகில இந்திய கூட்டுறவு வார விழா மாவட்ட ஆட்சியர் ரமண சரஸ்வதி, தலைமையில், அரியலூர் சட்ட மன்ற உறுப்பினர்கள் சின்னப்பா, கண்ணன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது, விழாவில் போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் கலந்து கொண்டு, போட்டிகளில் வெற்றிப் பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு பரிசுகள், சிறந்த சங்கங்களுக்கு கேடயங்கள், சிறுவர், சிறுமிகளுக்கு சிறுதுளி சேமிப்பு கணக்கு திட்டத்தின் கீழ் உண்டிப்பெட்டிகள் மற்றும் 1,097 பயனாளிகளுக்கு ரூ.8.07 கோடி மதிப்பீட்டில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இக்கூட்டத்தில், மாவட்ட ஊராட்சிக்குழுத் தலைவர் சந்திரசேகர், கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் தீபாசங்கரி, அரியலூர் நகர்மன்ற தலைவர் சாந்தி உட்பட பலர் கலந்துகொண்டனர்.