அரக்கோணம் நவ, 21
ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் நகரில் மாணவர்கள் கல்வி மற்றும் ஆய்வறிவு அறக்கட்டளை ( செல்ப்) சார்பில் அதன் காப்பாளர் வேலாயுதம் ஆலோசனை பேரில் அரக்கோணம் சுற்று பகுதியில் வசிக்கும் 85 ஏழை மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு ரூ. 5.50 லட்சம் கல்வி உதவித் தொகை பகிர்ந்து அளிக்கப்பட்டது.
அரக்கோ ணம் நகராட்சி ஆணையாளர் லதா, மாவட்ட கல்வி அதிகாரி ஹேமலதா, ராணிப் பேட்டை நகர மன்ற துணைத் தலைவர் ரமேஷ் கர்ணா, ரயில் பயணிகள் சங்க தலைவர் நைனா மாசிலாமணி, அறம் கல்விச் சங்கத் தலைவர் முனைவர் கலை நேசன், தலைமையாசிரியர் பிரின்ஸ் தேவாசீர்வாதம், ஹானா பாண்டியன், குளோ அறக்கட்டளை ஜேம்ஸ், கொரோனா நல் லடக்க குழு தலைவர் முகமது அலி, சந்தர், அம்பேத் ஆனந்தன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு 85 மாணவர்களிடமும் காசோலைகளை வழங்கினர்.