Month: August 2022

கொடைக்கானலில் காற்றுடன் சாரல் மழை; மரங்கள் முறிந்து விழுந்து போக்குவரத்து பாதிப்பு

திண்டுக்கல் ஆகஸ்ட், 6 கொடைக்கானல் பகுதியில், கடந்த 3 நாட்களாக தொடர்ந்து சாரல் மழை பெய்து வருகிறது. அதன்படி இன்று காலை முதல் இரவு வரை சில இடங்களில் சாரல் மழையும், மிதமான மழையும் பெய்தது. தொடர் மழை எதிரொலியாக நகரை…

வரலட்சுமி நோன்பை முன்னிட்டு நெல்லையப்பர் கோவிலில் 1008 சுமங்கலி பூஜை.

நெல்லை ஆகஸ்ட், 6 ஆடி மாதம் வளர்பிறையில் முழுநிலவு வருவதற்கு முந்தைய வெள்ளிக்கிழமையில், சுமங்கலிப் பெண்கள் தங்கள் கணவன் நலத்தோடும், ஆரோக்கியத்தோடும், செல்வத்தோடு இருக்கவும், தாலி பாக்கியம் நிலைக்கவும், இல்லத்தில் செல்வம் கொழிக்கவும் வரலட்சுமி நோன்பை கடைபிடிக்கின்றனர். இந்த ஆண்டுக்கான வரலட்சுமி…

தென்னை விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்.

கோயம்புத்தூர் ஆகஸ்ட், 6 பொள்ளாச்சி கொப்பரை தேங்காயை கிலோ ரூ.140-க்கு கொள்முதல் செய்ய வேண்டும். கேரளாவை போன்று முழு தேங்காயை கூட்டுறவு சங்கம் மூலம் ரூ.50-க்கு கொள்முதல் செய்து, அனைத்து தென்னை மரங்களுக்கும் பயிர் காப்பீடு வழங்க வேண்டும். தென்னை வளர்ச்சி…

செஸ் ஒலிம்பியாட் – தமிழக வீரர் பிரக்ஞானந்தா வெற்றி

சென்னை ஆகஸ்ட், 6 186 நாடுகள் இடையிலான 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நடந்து வருகிறது. இரு பிரிவுகளில் நடக்கும் இந்த செஸ் திருவிழா 11 சுற்றுகளை கொண்டது. இதன் முடிவில் அதிக புள்ளிகளை குவிக்கும் அணி…

வெளிநாட்டு செஸ் வீரர்கள் பார்த்து ரசித்த மாமல்லபுர சிற்பங்கள்.

செங்கல்பட்டு ஆகஸ்ட், 6 மாமல்லபுரத்தில் 44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி நடந்து வருகிறது. வருகிற 10-ம்தேதி வரை நடக்கும் இந்த போட்டியில் 186 சர்வதேச நாடுகளை சேர்ந்த செஸ் வீரர்கள் 2 ஆயிரம் பேர் பங்கேற்கின்றனர். இந்த நிலையில் நேற்று…

வைத்தியநாத சுவாமி கோவிலுக்குள் புகுந்த தண்ணீர்

அரியலூர் ஆகஸ்ட், 6 குலமாணிக்கம் கிராமத்தில் இருந்து அணைக்கரை வரை கொள்ளிடம் ஆறு 40 கிலோ மீட்டர் தூரத்திற்கு செல்கிறது. காவிரி ஆற்றில் அளவுக்கு அதிகமாக தண்ணீர் வரும்போது, கொள்ளிடத்தில் திறந்து விடப்படுவது வழக்கம். கடந்த 2005-ம் ஆண்டு 4 லட்சம்…

துணை ஜனாதிபதி தேர்தல்: இன்று வாக்குப்பதிவு

புதுடெல்லி ஆகஸ்ட், 6 நாட்டின் தற்போதைய துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவின் பதவிக்காலம், வரும் 10-ம் தேதி முடிகிறது. அடுத்த துணை ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கான தேர்தல் இன்று நடத்தப்படுகிறது. இந்த தேர்தலில், நாடாளுமன்ற மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள் 788…

மறுக்கட்டுமான பயனாளிகள் கருணைத்தொகை மற்றும் தற்காலிக ஒதுக்கீடு ஆணை – அமைச்சர் வழங்கினார்

கடலூர் ஆகஸ்ட், 6 தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் மூலம் கடலூர் செம்மண்டலம் மறுக்கட்டுமான திட்டப் பகுதி பயனாளிகள் 117 பேருக்கு கருணைத்தொகை மற்றும் தற்காலிக ஒதுக்கீடு ஆணை வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்தது. தமிழ்நாடு நகர்ப்புற…

நகர்நல மையம் அடிக்கல் நாட்டு விழா

நெல்லை ஆகஸ்ட், 5 நெல்லை மாநகர பகுதியில் தலா ரூ. 25 லட்சம் மதிப்பில் 5 இடங்களில் புதிதாக நகர்நல மையம் அமைக்க அடிக்கல் நாட்டு விழா இன்று நடைபெற்றது. மேலப்பாளையம் கொடிமரம் பகுதியில் நடந்த விழாவில் மத்திய மாவட்ட செயலாளர்…

டெல்லியில் பிரதமர் மோடி, மம்தா பானர்ஜி சந்திப்பு.

புதுடெல்லி ஆகஸ்ட், 5 டெல்லியில் ஆகஸ்ட் 7-ம் தேதி நடைபெறும் நிதி ஆயோக் நிர்வாக குழு கூட்டத்தில் பங்கேற்க மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி நேற்று டெல்லி சென்றார். இந்நிலையில், இன்று அவர் டெல்லியில் பிரதமர் மோடியை நேரில் சென்று சந்தித்தார்.…