பெரம்பலூர் நவ, 20
பெரம்பலூர் அருகே கவுல்பாளையத்தில் ரூ.3 கோடியே 60 லட்சம் மதிப்பில் இலங்கை தமிழர்களுக்கான நவீன வசதிகளுடன் கூடிய 72 வீடுகள் கொண்ட குடியிருப்பு கட்டுவதற்கான பணிகளுக்கான பூமி பூஜை நடந்தது.
இதற்கு தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தலைமை தாங்கி பூமி பூஜைக்கு அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார். மாவட்ட ஆட்சியர் ஸ்ரீவெங்கடபிரியா, சட்ட மன்ற உறுப்பினர் பிரபாகரன், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.