துபாய் நவ, 13
ஐக்கிய அரபு அமீரகத்தில் துபாய் ஈமான் சார்பில் மீலாது நபி விழாவையொட்டி சர்வதேச அளவில் பேச்சுப் போட்டி நடைபெற்றது.
இப்போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கும் விழா இன்று துபாயில் நடைபெற்றது.
இவ்விழா ஈமான்அமைப்பின் தலைவர் பி.எஸ்.எம் ஹபிபுல்லா கான் தலைமையில் பொதுச் செயலாளர் ஹமீது யாசின், துணைத் தலைவர் கமால் உள்ளிட்டோர் முன்னிலையில் ஈமான் நிர்வாகிகள் மற்றும் போட்டியில் வெற்றி பங்கேற்றோர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக ஜமால் முகமது கல்லூரியின் முன்னாள் மாணவர் சங்க தலைவர் சூப்பர் சோனிக் ஜியாவுதீன், சேது கல்லூரி குழுமங்களின் தலைவர் ஜலில், எஸ். ஈவென்ட் வெங்கட், பைரோஸ், இன்டர்நேஷனல் வணிக குழுமத்தின் தலைவர் அன்வர், பொதுச் செயலாளர் ஷா நவாஸ், பல் சிறப்பு மருத்துவர் முர்சிக், மக்கள் ஆர்ஜே சாரா, எழுத்தாளர் டாக்டர் ரோகிணி, கிரீன் குலோபல் நிறுவனர் சமூக சேவகி ஜாஸ்மின் உள்ளிட்ட பலர் குடும்பத்தோடு பங்கேற்றனர்.
இவ்விழாவில் வெற்றி பெற்றவர்களுக்கு நினைவு பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.
இதனைத் தொடர்ந்து, பேச்சுப்போட்டியில் கலந்துகொண்ட சண்முகத்திற்கு சிறப்புப்பரிசும் மற்றும் அவர் நண்பர்களான மதிவாணன் மற்றும் நகராஜிக்கு சால்வை அணிந்து கௌரவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்ச்சியினை செயலாளர் ஹாஜா அலாவுதீன் தொகுத்து வழங்கினார். மேலும் ஆயர்பாடி முஜீப், நிர்வாகிகள் எஸ்.பி.எஸ் நிஜாம் சமீர் இம்தாதுல்லா, சாகுல் ஹமீத், மீடியா அஸ்கர், யாகூப் உள்ளிட்டோர் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு பணிகளை செய்தனர். நிறைவாக ஒருங்கிணைப்பு செயலாளர் மற்றும் வணக்கம் பாரதம் பத்திரிக்கையின் முதன்மை செய்தியாளர் நஜீம் மரிக்கா அவர்களின் நன்றி உரையுடன் நிகழ்ச்சி நிறைவு பெற்றது.
நஜீம் மரைக்கா.
முதன்மை செய்தியாளர்.
அமீரக செய்திப் பிரிவு.