ராமநாதபுரம் நவ, 12
தென்மேற்கு வங்க கடல் பகுதியான குமரி கடல் மற்றும் அதனை ஒட்டிய கடல் பகுதியில் பலத்த காற்று மணிக்கு 45 கிலோமீட்டர் முதல் 55 கிலோமீட்டர் வரை வீச கூடும் என வானிலை எச்சரிக்கை மையம் தெரிவித்துள்ளது. எனவே ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ் தனது செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.