கீழக்கரை நவ, 10
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அம்மா மக்கள் முன்னேற்ற கழக நகர செயலாளர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
அதன்படி அக்கட்சியின் பொதுச் செயலாளர் டி.டி.வி தினகரன்
வெளியிட்டுள்ள அறிவிப்பில்,
கீழக்கரை நகர் அம்மா மக்கள் முன்னேற்ற கழக செயலாளராக கீழக்கரையை சேர்ந்த வளர்ந்து வரும் தொழிலதிபர் மகேஷ் குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
மேலும் அம்மா மக்கள் முன்னேற்ற கழக மாவட்ட செயலாளர் முனியசாமி பரிந்துரையின் பேரில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் புதிய நிர்வாகிகளை அறிவித்துள்ளார்.
இதைத் தொடர்ந்து அவருக்கு அ.ம.மு.க ஜெயலலிதா பேரவை மாவட்ட இணை செயலாளர் அமீரகம் சாதிக், கீழக்கரை நகர் துணை செயலாளர் ஜீவா, இணை செயலாளர் மீரா லெப்பை, நகரப் பொருளாளர் அம்பா நகர் இளைஞர் அணி செயலாளர் சாகுல் ஹமீது மற்றும் முகமது ஆபித் ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர்.
மேலும் கீழக்கரையை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள், சமூக அமைப்பினர் ஜமாத் முக்கிய நிர்வாகிகள், கிறிஸ்துவ பாதிரியார்கள் மற்றும் அனைத்து கட்சி முக்கிய நிர்வாகிகள், நகர் மன்ற உறுப்பினர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
அதனைத் தொடர்ந்து கீழக்கரை முக்கிய இடங்களில் கட்சி நிர்வாகிகள் மற்றும் நண்பர்கள் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர்.
மேலும் இந்த நியமனம் தொடர்பாக மகேஷ் குமார் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில்:
என்னை நியமித்த அமமுக,கட்சியின் பொதுச் செயலாளர் டி டி வி தினகரன் அவர்களுக்கு எனது கோடான கோடி நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன். மேலும் என்னை பரிந்துரை செய்த மாவட்ட கழக செயலாளர் G. முனியசாமி அவர்களுக்கு பணிவான வணக்கங்கள் மற்றும் நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன். கீழக்கரை நகர செயலாளராக பொதுமக்களுக்கு என்ன தேவைப்படுகிறதோ அவர்களின் தேவைகளை நான் பூர்த்தி செய்வேன். அதேபோன்று கீழக்கரைக்கு அரசு சம்பந்தப்பட்ட அனைத்து உதவிகளையும் பெற்று தருவேன். மேலும் வருகின்ற பாராளுமன்றத் தேர்தலில் அ.ம.மு.க கட்சியின் சார்பாக போட்டியிடும் வேட்பாளர்களுக்கு கீழக்கரை மக்களின் அதிக வாக்குகள் பெற்றுத் தர அயராது பாடுபடுவேன் என உறுதி அளித்தார் இதனைத் தொடர்ந்து கட்சி சம்பந்தப்பட்ட பணிகளையும், மக்களின் கோரிக்கைகளையும் என்னிடம் எந்நேரமும் தெரிவிக்கலாம் என தெரிவித்தார்.