மதுரை நவ, 10
பிரதமர் மோடி வருகையொட்டி இன்றும் நாளையும் மதுரை திண்டுக்கல் மார்க்கமாக செல்லும் வாகனங்கள் மாற்றுப்பாதையில் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பிரதமர் மதுரையிலிருந்து திண்டுக்கல் சாலை மார்க்கமாக செல்ல உள்ளதால் இன்று பாதுகாப்பு முன்னோட்டம் நிகழ்வு நடக்கிறது. இதனால் இன்று மதியம் 1 மணி முதல் 5 மணி வரையும், நாளை காலை 11 மணி முதல் 5 மணி வரையும் போக்குவரத்து மாற்றப்படுகிறது.