கோயம்புத்தூர் நவ, 6
தொண்டாமுத்தூர் ஒன்றியத்தில் கிராம கோவில் பூசாரிகள் பேரவை சார்பாக ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் சேலம், திருப்பூர், ஈரோடு, கோவை, உள்ளிட்ட பல்வேறு பகுதியில் இருந்து கிராம பூசாரிகள் மற்றும் சங்க உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்தில் அனைத்து கிராம கோவில் பூசாரிகளுக்கு மாத ஊதிய தொகை வழங்க வேண்டும். மற்றும் 60 வயதிற்கு மேற்பட்ட அனைத்து பூசாரிகளுக்கும் மாத ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.