துபாய் நவ, 5
ஐக்கிய அரபு அமீரகத்தின் கொடி நாள் கொண்டாட்டம் கடந்த வியாழக்கிழமை 3 ம் தேதியன்று அன்று அமீரகமெங்கும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வந்தது.
அதன் ஒருபகுதியாக் ஐக்கிய அமீரகத்தின் ஷார்ஜாவில் அல் புத்தீனா லுலு சென்டரில் வைத்து இந்த வருட கொடிநாள் நிகழ்ச்சி வர்த்தக மையத்தின் பொறுப்பாளர் கணேஷ் பிள்ளையின் ஆலோசனைப்படி நடைபெற்றது.
இதில் சிறப்பு அழைப்பாளர்களாக அல்மஷா மற்றும் அமீரகத்தில் பல சமூகசேவைகள் செய்துவரும் சமூக சேவகி முனைவர் ஜாஸ்மீன் கலந்துகொண்டு அமீரக கொடியை ஏற்றியுள்ளார்.
இந்நிகழ்ச்சியில் லூலூ மார்கெட் கண்காணிப்பாளர் மற்றும் ஊழியர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
நஜீம் மரைக்கா.முதன்மை செய்தியாளர்.அமீரக செய்தியாளர்.