நாகப்பட்டினம் நவ, 3
உலக புகழ்பெற்ற வேளாங்கண்ணி பேராலயத்தில் கல்லறை திருநாள் சிறப்பு திருப்பலி நடைபெறுகிறது. பல்வேறு மாநிலங்களில் இருந்து வந்த ஏராளமான பக்தர்கள் இறந்தவர்களின் சமாதியை அலங்கரித்து மெழுகுவர்த்தி ஏற்றி மனமுருகி பிரார்த்தனை செய்தனர். இறந்த உறவினர்களின் ஆன்மாவிற்கு மரியாதை செலுத்தும் வகையில் இன்றைய தினத்தை கல்லறை தினமாக கிறுஸ்தவர்கள் கடைபிடித்து வருகின்றனர். கல்லறைத் திருநாளை முன்னிட்டு உலக புகழ்பெற்ற நாகை மாவட்டம் வேளாங்கண்ணி பேராலயத்தில் சிறப்பு திருப்பலி நேற்று நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து வேளாங்கண்ணி கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள கடந்த 2004ம் ஆண்டு சுனாமி பேரிடரில் சிக்கி உயிரிழந்தவர்களின் நினைவு ஸ்தூபியில் வேளாங்கன்னி பேராலயத்தின் சார்பில் கல்லறைத்திருநாள் வழிபாடு நடைபெற்றது.