திருப்பத்தூர் ஆகஸ்ட், 5
தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் வெண்புள்ளிகள் விழிப்புணர்வுக்கான பதாகை வழங்குதல் மற்றும் உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி திருப்பத்தூர் அரசு மீனாட்சி மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நடந்தது.
இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட கவுரவத் தலைவர் அச்சுதன் தலைமை வகித்தார். பள்ளியின் தலைமை ஆசிரியர் செல்வி வரவேற்றார். மாவட்ட துணைத் தலைவர் துரைமணி, மாவட்ட சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் இளவரசி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒருங்கிணைந்த கல்வி மாவட்ட உதவி திட்ட அலுவலர் பிரபாகரன் விழிப்புணர்வு நிகழ்ச்சியை தொடங்கி வைத்து, பதாகைகளை மாணவர்களுக்கு வழங்கி, உறுதிமொழியை வாசித்தார்.
இந்நிகழ்ச்சியின் முடிவில் மாவட்ட துணைச் செயலாளர் செண்பகவல்லி நன்றி கூறினார். மாவட்ட செயலாளர் மாணிக்க மணிராஜ் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார்.
மேலும் செய்திகளை உடனே படிக்க..
http://www.vanakambharatham24x7news.in