கொழும்பு அக், 31
இலங்கையின் மலையக பகுதிகளில் வசிக்கும் தமிழர்களான தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு புதுச்சேரி அரசு சார்பில் மருந்து பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டன. மலையக தோட்ட தொழிலாளர்களுக்கான அரசியல் கட்சியான சிலோன் தொழிலாளர் காங்கிரஸ் இதற்கான பணிகளை ஒருங்கிணைத்தது. இந்த மருந்து பொருட்கள் நேற்று கொழும்பு போய்ச் சேர்ந்தன. அவற்றை அதிபர் ரணில் விக்ரமசிங் பெற்றுக்கொண்டார். அவர் பேசுகையில், தோட்ட தொழிலாளர்களை இலங்கை சமூகத்துடன் மேலும் சிறப்பாக இணைப்பது குறித்து ஆராய ஒரு குழு அமைக்கப்படும் என்று கூறினார்.