பெரம்பலூர் அக், 29
பெரம்பலூரில் வருகிற நவம்பர் மாதம் 4 ம் தேதி அன்று திமுக. சார்பில் நடைபெறும் இந்தி திணிப்பு எதிர்ப்பு தீர்மான விளக்க பொதுக்கூட்டத்தில் திமுக. தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், தி.மு.க. முதன்மை செயலாளரும், அமைச்சருமான நேரு, துணை பொதுச்செயலாளர் ராசா ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகிறார்கள்.
இதைத்தொடர்ந்து மறுநாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அரியலூர் மாவட்டம், கொல்லாபுரத்தில் நடைபெறும் அரசு நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார். இதற்காக முதலமைச்சர் வருகிற 4 ம் தேதி காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி விமான நிலையத்துக்கு வருகிறார். அங்கு அவருக்கு கட்சியினர், பொதுமக்கள் வரவேற்பளிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.