கீழக்கரை அக், 27
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் காமராஜ் பவுண்டேசன் ஆஃப் இந்தியாவின் ஆலோசனைக் கூட்டம் கீழக்கரை வட்டகை நாடார் ஜனோபகாரச் சங்க வளாகத்தில் நடைபெற்றது.
இவ்வமைப்பு 1975-ம் ஆண்டு மறைந்த கேரள மாநில முன்னாள் அமைச்சர் நீலலோகிததாஸன் நாடாரால் தொடங்கப்பட்ட கட்சி சார்பற்ற அமைப்பாகும். இந்த அமைப்பானது கடந்த 47 ஆண்டுகளாக இந்தியா முழுவதும் பெருந்தலைவரின் புகழையும் கொள்கைகளையும் பரப்புவதற்காக பல்வேறு நிகழ்ச்சிகளையும், வருடாந்திரக் கூட்டங்களையும் நடத்தி வருகிறது. அவ்வகையில் அமைப்பின் ஆண்டு மாநாட்டை ராமநாதபுரம் மாவட்டத்தில் நடத்த திட்டமிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
கீழக்கரையில் நடந்த கூட்டத்திற்கு அமைப்பின் நிறுவனர் மற்றும் தலைவர் நீலலோகிததாஸன் நாடார், தமிழக தலைவர் வழக்கறிஞர் இராஜசேகரன், தில்லையேந்தல் பஞ்சாயத்து தலைவர் கிருஷ்ணமூர்த்தி, கீழக்கரை வட்டகை நாடார் ஜனோபகார சங்கத் தலைவர் ஜெயமுருகன், செயலாளர் நாகராஜன், கீழக்கரை ரோட்டரிகிளப் முன்னாள் தலைவர் அப்பா மெடிக்கல் சுந்தரம், கல்லூரி பேராசிரியர் சேதுராமன் உள்ளிட்ட 40க்கும் மேற்பட்டோர் பங்கேற்று ஆலோசனைகளை வழங்கினார்கள்.
நஜீம் மரைக்கா.
முதன்மை செய்தியாளர்.
அமீரக செய்திப் பிரிவு.