Spread the love

கள்ளக்குறிச்சி அக், 16

மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம் சார்பில் மாவட்ட திறன்குழு உறுப்பினர்களுக்கான கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

இதற்கு மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன்குமார் தலைமை தாங்கினார். கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன்குமார் பேசுகையில்,

நரிகுறவர் மற்றும் பழங்குடியினர் மக்களுக்கு வாழ்வாதார பயிற்சியளிக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தினார். இக்கூட்டத்தில் மாவட்ட திறன் பயிற்சி உதவி இயக்குனர் நடராஜன், மாவட்ட சமூக நல அலுவலர் தீபிகா, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சரஸ்வதி, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் முனீஸ்வரன், கள்ளக்குறிச்சி நகராட்சி ஆணையர் குமரன் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *