துபாய் அக், 3
ஐக்கிய அரபு அமீரக துபாயில் WIT- Where In Tamilnadu அசோசியேசன் அமைப்பினர் கண்மணி பூங்கா என்ற பெயரில் சர்வதேச குழந்தைகளுக்கான தனித்திறன் நிகழ்ச்சி மற்றும் கலை நிகழ்ச்சி அமைப்பின் நிர்வாகி மெர்லின் தலைமையில் லூலு ஷாப்பிங் மாலில் நடைபெற்றது.
இதில் சிறப்பு விருந்தினர்களாக தமிழகத்தில் இருந்து தேசிய விருது பெற்ற தமிழ் நடிகை அபர்ணா பாலமுரளி மற்றும் நடிகரும் தயாரிப்பாளருமான ஆர்.கே.சுரேஷ் கலந்து கொண்டனர். மேலும் துபாய் ஈமான் அமைப்பின் பொதுச் செயலாளர் ஹமீது யாசின், லூலூ மார்க்கெட்டின் பொதுச் செயலாளரும் KMCC யின் செயலாளருமான நிஜாமுதீன் மற்றும் ஈமான் அமைப்பின் விழாக்குழு செயலாளர் நஜீம் மரிக்கா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மேலும் அபிநா மற்றும் சைலஜா ஆகியோர் மேற்பார்வையில் கலைவாணி மற்றும் ஆதித்யா ஆகியோர் நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்தனர். இந்நிகழ்ச்சியில் டிக் டாக் கல்ப்புல் ஆன்ரோ மற்றும் ரித்விக் ஆர்மி சுதர்சன் உள்ளிட்ட ஏராளமான தமிழர்கள் மற்றும் மலையாளிகள் குடும்பத்துடன் கலந்து கொண்டனர்.
இதைத் தொடர்ந்து குழந்தைகள் மற்றும் பெண்களின் ஆடை அலங்கார அணிவகுப்பு போட்டி மற்றும் நடன நிகழ்ச்சிகள் நடைபெற்று பரிசுகள் வழங்கப்பட்டது.
நஜீம் மரைக்கா. முதன்மை செய்தியாளர், அமீரக செய்திப் பிரிவு.