கடலூர் அக், 2
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம், பிரதமரின் மக்கள் ஆரோக்கியத் திட்டம் குறித்த ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன் குமார் தலைமையில் நடைபெற்றது.இக்கூட்டத்தில் மருத்துவப் பணிகள் இணை இயக்குனர் பாலச்சந்தர், தேசிய சுகாதார குழும ஒருங்கிணைப்பாளர் செந்தில், திட்ட ஒருங்கிணைப்பாளர் சாமிநாதன், மாவட்ட கருவூல அலுவலர் இளங்கோ மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.