சென்னை செப், 30
செங்கல்பட்டு மாவட்டம் மகேந்திரா சிட்டியில் ரூ.1,100 கோடி முதலீட்டில் 14 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கும் வகையில் பெகாட்ரான் தொழிற்சாலை அமைக்கப்பட்டுள்ளது. தைவான் நாட்டை சேர்ந்த இந்த நிறுவனம் ஸ்மார்ட் போன்களை உற்பத்தி செய்ய இருக்கிறது. இந்த தொழிற்சாலையின் திறப்பு விழா நேற்று நடைபெற்றது.
இந்த விழாவில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மத்திய மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பவியல் துறை இணை மந்திரி ராஜீவ் சந்திரசேகர், தமிழக குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் அன்பரசன், பெகாட்ரான் நிறுவனத்தின் தலைவர் ஜெங் ஜியான் ஜாங், மேலாண்மை இயக்குனர் லின் ஜியு டேன், முதுநிலை துணைத் தலைவர் டென்சி யாவ், முதன்மை செயல் அலுவலர் கியு ஷிங் ஜங், செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத் உள்பட பலர் கலந்து கொண்டனர்.