கள்ளக்குறிச்சி செப், 26
சின்னசேலம் தாலுகா அலுவலகத்தில் வருவாய்த்துறை அலுவலர்களுக்கான ஆய்வுக்கூட்டம் நடந்தது. இதற்கு வட்டாட்சியர் இந்திரா தலைமை தாங்கினார். தலைமையிடத்து துணை வட்டாட்சியர் ராஜா, மண்டல துணை வாட்டாட்சியர் மனோஜ் முனியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வருவாய் உதவியாளர் சுமதி வரவேற்றார். இதில் இ-அடங்கல், ஆன்லைன் சான்றுகள், வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண் இணைப்பு, விவசாயிகள் நிலங்களில் பயிரிடப்பட்டுள்ள வேளாண் பயிர் கணக்கெடுப்பு குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.
மேலும் இதில் குடிமை பொருள் தனி வட்டாட்சியர் கோத்தமன், சார் ஆய்வாளர்கள் உமா, சுஜாதா, வருவாய் ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், காந்திமதி, உமாமகேஸ்வரி மற்றும் அனைத்து கிராம நிர்வாக அலுவலர்கள் கலந்து கொண்டனர்.